அறிவாற்றல் உடைய கணினி தொழிநுட்ப துறையில் புதிய பரிணாம வளர்ச்சியாக மனித மூளையின் செயல்பாடுகளை ஒத்த முன்மாதிரி 'சிப்' யை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த 'சிப்' மனிதர்களின் மூளையைப் போல நினைவுகளை செயல்முறைப்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூழலை உணர்தல், இலக்குகளைத் தெரிந்துகொள்ளுதல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளுதல், சிக்கலான தரவுகளை உணர்ந்து கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரியான பதிலை வழங்குதல் ஆகியவை இந்த சிப்பின் முக்கிய நோக்கம் என ஐ.பி.எம் தெரிவித்துள்ளது. இதனை உருவாக்க 100 ஆராய்ச்சியாளர்கள் சுமார் 6 வருடங்களாக பணியாற்றியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்கான முகவர் நிலையம் சுமார் 41 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நிதியுதவியளித்துள்ளது. ஐ.பி.எம் அமைப்பும் இதற்கு நிதியுதவியளித்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment