தியாக திருநாள் நல்வாழ்த்துகல்(அதிரை ரிபோர்டு நண்பர்கள்)

HTML lessons

Sunday, August 21, 2011

சோதனையின்போது பர்தாவை அகற்ற மறுத்தால் ஜெயில்


சிட்னி, ஆக.
 
ஆஸ்திரேலியாவில் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் சமீபத்தில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட உள்ளது. அதன்படி போலீசாரின் சோதனையின்போது வாகனம் ஓட்டுபவர்கள் பர்தா, ஹெல்மட்கள், முகமூடிகள், முகத்தை மூடி இருக்கும் திரை சீலைகள் போன்றவற்றை அகற்ற வேண்டும். இவை தவிர போலீசாரின் சோதனையின் போது தேவைப்பட்டால் உடலில் அணிந்திருக்கும் ஆபரணங்களையும் கூட கழற்ற வேண்டும்.
 
சோதனையின்போது, அவற்றை அகற்ற மறுத்தால் ஒரு ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்க அந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சோதனையின்போது மட்டுமின்றி கோர்ட்டு விசாரணை மற்றும் சிறைக்கு சென்று கைதிகளை பார்க்க செல்பவர்களும் பர்தா மற்றும் முகத்தில் மறைத்து இருப்பவைகளை அகற்ற வேண்டும். அகற்ற மறுத்தால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
 
இந்த தகவலை நியூசவுத் வேல்ஸ் மாகாண தலைவர் பார்ரி ஓ பாரெல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், Òமதங்களையும் அவற்றை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறேன். அதேவேளையில் ஒருவரை அடையாளம் கண்டு கொள்வதற்கு போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார்.
 
இச்சட்டம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More