தியாக திருநாள் நல்வாழ்த்துகல்(அதிரை ரிபோர்டு நண்பர்கள்)

HTML lessons

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Sunday, November 6, 2011

இந்தியா முழுவதும் தரத்துடன் கூடிய இலவச முன்மாதிரி பள்ளிக்கூடம்


ஆஸிம் பிரேம்ஜி இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு இலவச முன்மாதிரி பள்ளிக் கூடங்களை ஆரம்பிக்க திட்டம்.
இந்தியாவின் மூன்றாவது பணக்காரர், தன்னுடைய சொந்த செலவில் நடத்தப்படும் Azim Premji Foundation (APF)மூலமாக நல்லெண்ணத்தின் தொடக்கமாக, நாடு முழுவதும் மாவட்டத்திற்கு இரண்டு என்று, 1300 இலவச பள்ளிக்கூடங்களை, கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த பள்ளிக்கூடங்கள் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியுடன் மற்றும் கல்வித்திட்டத்துடன் இணைக்கப் பெற்றதாகவும் இருக்கும். இந்த திட்டம் வெற்றி பெற்றால், இந்தியாவின் பொதுவான கல்விக் கொள்கைக்கு சவாலாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற செல்வமிகுந்த தொழிலதிபர்களுக்கு உந்துதலாகவும் இருக்கும்.
இந்த பள்ளிக் கூடங்கள் வழக்கமான 1 முதல் 12 வரையிலான வகுப்புகளை கொண்டிருக்கும். ஒரு வளர்ந்த நாட்டின் அடிப்படைத் தேவையான தரமான கல்வி மட்டுமே மற்ற பள்ளிக் கூடங்களில் இருந்து மாறுபட்டிருக்கும் என்று ஆஸிம் பிரேஜி கூறினார். விப்ரோவின் APFஆல் 2001 ல் தொடங்கப்பட்டு, சமீபத்தில் அதன் வளர்ச்சித் திட்டங்களை மீளாய்வு செய்தபோது, 1300 பள்ளிக்கூடங்கள் திட்டம் உதயமானது. ICSE/CBSE போல ஒரு தனிப்பட்ட கல்விக் குழுமத்தை அமைப்பது எங்களுடைய ஒரு குறிக்கோள் என்று APFன் CEO திலீப் ரஞ்சேகர் கூறினார்.
சுகாதாரம் மற்றும் ஊட்டச் சத்தோடு கூடிய மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிதான் இந்த பள்ளிக் கூடங்களின் நோக்கமாக இருக்கும் என்று இந்த 9,000 கோடி ரூபாய் திட்டத்தோடு தொடர்புடையவர்கள் தெரிவித்தனர். எங்களுடைய இந்த முயற்சி, கல்வியிலே வளர்ச்சியடையாத இடங்களில் இந்த பள்ளிக் கூடங்களை நிறுவுவது தானே தவிர தற்போது உள்ள பொது மற்றும் தனியார் பள்ளிகளோடு போட்டியிடுவதற்கல்ல என்றும் திலீப் அவர்கள் கூறினார்கள்.
கர்நாடகா, ராஜஸ்தான், உத்தர்காண்ட் மாநிலங்களில், ஒன்றரை வருடத்தில் 7 பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்படும். எதிர்பார்ப்பது போல் எல்லாம் சரியாக நடக்கும்போது, 2025 ம் வருடத்தில் 1300 பள்ளிக் கூடங்களும் இயங்க ஆரம்பித்துவிடும். மற்ற பள்ளிக் கூடங்களுக்கு, தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை கொடுப்பதற்கும், நம்மை நாமே தரமான கல்வியை கற்று போதிப்பதற்கு ஆட்படுத்திக் கொள்வதற்குமான இரட்டை கொள்கைதான் இந்த பள்ளிக் கூடத்தின் பின்னனியில் உள்ளதாகும்.
நன்றி: டைம்ஸ் ஆஃப்ஸ் இந்தியா

Wednesday, August 24, 2011

IIMஇல் MBA படிக்க ...


IIMஇல்  MBA படிக்க CAT நுழைவுத் தேர்வு 
இந்தியாவில் படித்து முடித்தவுடன் மிக அதிகச் சம்பளம் பெற்றுத் தரும் படிப்பு IIM (Indian Institute of Management)இல் பயிற்றுவிக்கப்படும் MBA படிப்புதான். அதிக பட்சமாக ஒரு வருடத்திற்கு ஒருகோடி (மாதம் 8 லட்சம்) வரை சம்பளம் IIM-ல் MBA படித்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்படி அதிகச் சம்பளம் தரும் இந்தப் படிப்புகளில் சேர CAT என்ற நுழைவு தேர்வை எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.  இதில் முஸ்லிம்களையும் சேர்த்து, பிற்படுத்தபட்ட வகுப்பினருக்காக 27% இட ஒதுக்கீடு உள்ளது.
மேலாண்மைப் படிப்புகள் (MBA) படிக்க மத்திய அரசால் உருவாக்கப்பட கல்வி நிறுவனம்தான் IIM (Indian Institute of Management). தமிழகத்தின் திருச்சி உட்பட இந்தியாவில் 13 இடங்களில் IIM இயங்கி வருகிறது. உலக அளவில் பொருளாதாரம் மற்றும் மேலாண்மைத் துறையில் மிகப் பெரிய பொறுப்புகள் வகிப்பவர்கள் இந்த IIMஇல் படித்தவர்கள்தாம். மிகப் பெரிய நிறுவங்களை நிர்வகிக்ககூடிய அளவிற்கு உலகத் தரத்தில் இங்குப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதுவே உலகின் முன்னணி நிறுவங்களை இங்கு ஈர்க்க காரணமாகின்றது.

CAT நுழைவுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் மத்திய அரசின் IIMமுக்கு மட்டுமல்லாமல் மாநில அரசுகள் நடத்தும் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிலும் தனியார் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிலும் MBA சேர்வதற்குப் பயன்படுகின்றது.

CAT-2011 நுழைவு தேர்வைப் பற்றிய விபரம்

விண்ணப்பிக்கும் முறை :
குறிபிட்ட Axis வங்கிக் கிளைகளில் CAT-2011 வவுச்சரை வாங்கி, www.catiim.in  எனும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். வவுச்சர் கிடைக்கும் Axis வங்கிக் கிளைகளின் முகவரி www.catiim.in/axisbank_branch.html   எனும் இணைய தளத்தில் உள்ளது.

விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி தேதி : செப்டம்பர் 28

விண்ணப்பத்தின் விலை : ரூ.1,600

தேர்வு நடைபெறும் தேதி : இந்தத் தேர்வு அக்டோபர் 22 முதல் நவம்பர் 18 வரை தொடர்ந்து நடைபெறும், விண்ணப்பிக்கும் நபர்கள் இதில் ஏதாவது ஒரு நாளில் தேர்வு எழுதுவார்கள்.

தேர்வு எழுதத் தகுதியான மாணவர்கள் :
  1. ஏதாவது ஒரு பட்டப் படிப்பு படித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.
  2. குறைந்தது 50% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு : முஸ்லிம்களையும் சேர்த்து, பிற்படுத்தபட்ட வகுப்பினருக்காக 27% இட ஒதுக்கீடு உள்ளது.

தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை மற்றும் கோவை உட்பட இந்தியாவில் 36 நகரங்களில் தேர்வு நடைபெறும்

இந்தத் தேர்வை பற்றி : இது கணினியில் எழுதும் தேர்வாகும்.  CAT தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது.  முதல் பகுதி Quantitative Ability & Data Interpretation.  இரண்டாம் பகுதி Verbal Ability & Logical Reasoning. ஒவ்வொரு தேர்வுக்கும் 70 நிமிடங்கள் எழுத ஒதுக்கப்படும், மொத்தம் 140 நிமிடங்கள். தேர்வு எழுதும் முன் 15 நிமிடம் தேர்வைப் பற்றி விளக்கப்படும்.

இந்த தேர்வுக்கு தயாராவது எப்படி?

இது வருடா வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த 5 ஆண்டுகளின் கேள்வித்தாள்களைப் பார்த்தால் பொதுவாக இத்தேர்வில் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன என அறிந்து கொள்ளலாம். அந்தப் பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். இந்தக் கேள்விதாள்களும் புத்தகங்களும் முக்கியப் புத்தகக் கடைகளில் கிடைக்கும்.   இதற்காகப் பல்வேறு பயிற்சி மையங்கள் தமிழகத்தில் உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்தும் பயிற்சி பெறலாம்.  பொதுவாக,  'தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?' என்ற கட்டுரை www.tntj.net/8622.html  இல் உள்ளது.

இந்தத் தேர்வை எழுதும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. காரணம், இந்த மாதிரி நுழைவுத் தேர்வுகளைப் பற்றி முஸ்லிம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிகக் கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும்தான், உண்மையில் நன்றாகப் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்தத் தேர்வுகள் கடினமில்லை.

மாணவர்களே!  'தேர்வுகள் கடினம்' என்ற தவறான சிந்தனையைக் குப்பையில் போடுங்கள். எந்தத் தேர்வையும் சந்தித்துச் சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான். அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வையுங்கள்; அவனிடம் வலியுத்திக் கேளுங்கள்; கடினமாக உழைத்துப் படியுங்கள்; நிச்சயம் அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைத் தருவான் இன்ஷா அல்லாஹ்.

CAT-2011 எனும் இத்தேர்வைப் பற்றிய முழு விபரங்களும் www.catiim.in எனும் இணையதளத்தில் உள்ளது. மேலும் விபரங்கள் அறிய எனது sithiqu.mtech@gmail.com எனும் ஈ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி.S.சித்தீக்.M.Tech
சத்திய மார்கம்.காம்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More