தியாக திருநாள் நல்வாழ்த்துகல்(அதிரை ரிபோர்டு நண்பர்கள்)

HTML lessons

Showing posts with label இயக்கங்கல். Show all posts
Showing posts with label இயக்கங்கல். Show all posts

Saturday, August 20, 2011

பாப்புலர் ஃப்ரண்ட் ஃபோபியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஊடகங்கள்

இந்தியாவில் தற்போது சில மீடியாக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு பிடித்த இலக்காக மாறியுள்ளது. சமீப காலமாக தொலைக்காட்சி சேனல்களிலும்,  நாளிதழ்களிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய தவறான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் மீதான் மீடியாக்களின் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும்தான் என்று இல்லாமல் எல்லா மாநிலங்களிலும் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் இருக்கின்ற பெரும்பாலான மொழிகள் வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களில் பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் இயக்க உறுப்பினர்கள் அறவே இல்லாத மாநிலங்களிலும் இத்தகைய மீடியாக்களின் தாக்குதல்கள் இருந்து வருகிறது. 

தற்போது இயங்கி வரும் மீடியாக்கள் வெளியிடும் அறிக்கைகள் எப்பொதும் வேடிக்கையாகவும் அதேசமயம் அந்த ஊடகங்களின் நம்பகத்தன்மையை இரு முறை யோசிக்க வேண்டிய நிலையிலேயே இருக்கின்றன. ஒரு அறிக்கையோ அல்லது செய்தியையோ வெளியிடும்போது அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை இத்தகைய மீடியாக்கள் சோதிப்பதில்லை. அப்படியே ஒரு தவறான செய்தியை வெளியிட்டுவிட்டாலும் பின்னர் உண்மை நிலை அறிந்தவுடன் தான் வெளியிட்ட செய்தி தவறு என்பதை மீண்டு பிரசுரிக்க வேண்டும் இதை பெரும்பாலான மீடியாக்கள் செய்வதில்லை. ஊடகங்களின் நெறிமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதில்லை. கடந்த சில மாதங்களாக இந்த ஊடகங்களை பார்க்கும்போது அவர்கள் வெளியிட்ட அபாண்டமான, அப்பட்டமான பொய் குற்றச்சாட்டுகளை நம்மால் சுட்டிக்காட்ட இயலும்.

சமீபத்தில் வெளியாகிய சில அறிக்கைகளை படிக்கும்போது இது போன்ற ஊடக தாக்குதல்கள் தற்செயலாய் ஏற்பட்டது அல்ல என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக‌ சதி வலை பின்னப்படுவதை உணரலாம்.
எல்லா ஊடகங்களும் இப்படித்தான் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது என்றாலும் ஊடகங்களில் சில பிரிவுகள் இருக்கின்றது, அவை சங்கப்பரிவார சித்தாந்தத்தை நோக்கி சரிந்திருக்கும் ஊடகங்களாக இருக்கின்றன.

இத்தகைய மீடியாக்கள் முஸ்லிம்கள் மீதும், இந்திய முஸ்லிம்களின் வலிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் போராடும் இயக்கங்கள் மீதும் காழ்புணர்ச்சியோடு செயல்படுகின்றனர். முஸ்லிம் சமூகத்தின் அப்பாவி இளைஞர்கள் எவ்வாரெல்லாம் திவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு விசாரணை உட்படுத்தப்பட்டதையும், பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதையும் நாம் அறிவோம். இதற்கு ஒரு நல்ல உதாரணம் சில வருடங்களுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட பெங்களூரைச்சேர்ந்த டாக்டர் ஹனீஃப். தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட டாக்டர் ஹனீஃபை அப்பாவி என ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்ட போதிலும் இந்திய பத்திரிக்கைகள் தொடர்ந்து ஹனீஃபை தீவிரவாதியாகவே சித்தரித்து செய்திகள் வெளியிட்டுக்கொண்டிருந்தது.இந்த மீடியாக்களின் இந்த விஷமப்பிரச்சாரத்தால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் இன்று தீவிரவாத கண்ணோட்டத்துடனே பார்க்கப்படுகிறார்கள். படித்த முஸ்லிம் இளைஞர்கள் தான் தீவிரவாத இயக்கங்களில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனரா? என்று கருத்து கணிப்புகள் நாளிதழ்களில் கேட்கும் அளவிற்கு இந்த பிரச்சாரம் அமைந்துவிட்டது. புதுடெல்லியில் நடைபெற்ற பாட்லா ஹவுஸ் போலி எண்கவுண்டர் விவகாரத்திலும் அப்பாவி இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை இந்த மீடியாக்கள் நியாயப்படுத்தின.  இத்தகைய செய்திகளிலிருந்து இந்தியாவில் செயல்படும் மீடியாக்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும், முஸ்லிம் இயக்கங்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவது ஊர்ஜிதமாகிறது.


கடந்த ஜூலை மாதம் 13அம் தேதி அன்று மும்பையில்நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம துரதிஷ்டவசமானதும், மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். ஆனால் எந்த ஒரு விசாரணையும் முடிவடையாத நிலையில், யார் இந்த தாக்குதலை நிகழ்த்தினார்கள் என்பதும் உறுதி செய்யப்படாத நிலையில் இந்த மீடியாக்கள் முஸ்லிம்களை இந்த குண்டுவெடிப்போடு தொடர்பு படுத்தி செய்திகள் வெளியிட்டன. இந்த சம்பவம் நிகழ்ந்து சிறிது நாட்களுக்கு பின்னர் புனேயில் வெளிவரும் "மிட் டே" என்ற பத்திரிக்கை பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய அவதூறான செய்தியை வெளியிட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கமும் அதனோடு தொடர்புடைய தடை செய்யப்பட்ட மற்ற இயக்கங்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று செய்தி வெளியிட்டது. மராட்டிய மொழியில் வெளிவரும் பத்ரிக்கையான "லோக் மாத்" இன்னும் ஒரு படி மேலே போய் அரசியல் கட்சியாக செயல்பட்டு வரும் எஸ்.டி.பி.ஐ கட்சி இதில்    சம்பந்தப்பட்டிருக்கலாம என செய்தி வெளியிட்டது. இவ்வாறு செய்தி வெளியிட்ட பத்திரிக்கையின் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று கேள்வி எழுப்பும்போது மஹாராஷ்டிரா மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையின் தூண்டுதலின் பேரில்தான் செய்திகள் வெளியிட்டதாகவும், மறுநாளே மறுப்பு செய்தி வெளியிடுகிறோம் என்றும் கூறுகின்றனர். ஆனால் அது அத்தோடு நின்றுவிடுவதில்லை.

பாப்புலர் ஃப்ரண்டிற்கு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக நாட்டில் பல்வேறு பத்ரிக்கைகள் பொய்யான் செய்திகளை வெளியிட்டது, சில ஆங்கில பத்திரிக்கை உட்பட. மீரட், ஜெய்பூர், பெங்களூ,கொச்சி போன்ற நகரங்களில் வெளிவரும் பத்திரிக்கைகள் இவ்வாறு எந்த ஒரு ஆதாரமும் இல்லாத‌ அவதூறு செய்திகளை பரப்பியது.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது இந்த மீடியாக்கள் பெரும்பாலும் கூறும் குற்றச்சாட்டு தடை செய்யப்பட்ட இயக்கமான சிமியுடன் தொடர்பு உண்டு என்பதுதான். ரகசிய பாதுகாப்பு படையின் மூலமாக இந்த செய்தி தங்களுக்கு கிடைத்ததாக இந்த மீடியாக்கள் கூறுகிறது. இத்தோடு மட்டுமல்லாம் இன்னும் எண்ணற்ற கற்பனை கதைகளை இந்த மீடியாக்கள் வெளியிடுவதில் எந்த ஒரு குறைபாடும் வைத்திடவில்லை. இல்லாத ஒரு இல்லாத ஒரு இயக்கமான (இந்தியன் முஜாஹிதீன்)னோடு பாப்புலர் ஃப்ரண்ட்டை தொடர்பு படுத்தி செய்திகள் வெளியிடுவது இவர்களின் வாடிக்கையாகிவிட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேறு எந்த இயக்கத்தோடும் தொடர்பு கிடையாது. இவை போன்ற அப்பட்டமான செய்திகளை வெளியிடும் எந்த பத்திரிக்கையாயினும் இதுவரை எந்த ஒரு ஆதாரப்பூர்வமான சாட்சிகளை வெளியிட்டதில்லை. இவை போன்ற முட்டாள்தனமான செய்திகளை வெளியிட்டுவிட்டு தங்களை "உளவுத்துறை" என்று கூறுவது வேடிக்கயாக இருக்கிறது. இவ்வாறான பத்திரிக்கைகள் தவறான செய்திகளை வெளியிட்ட போது நாம் இதனை கண்டித்து மறுப்பு கடிதம் எழுதியும் இது வரை எந்த ஒரு பத்திரிக்கையும் அதனை பிரசுரித்ததில்லை. இதிலிருந்து இவர்களின் இரட்டை நிலையை நாம் அறிந்து கொள்ளலாம். எத்தனையோ கேள்விகளை இந்த பத்திரிக்கை ஆசிரியர்களிடம் கேள்வி கேட்ட பின்னரும் இதுவரை அவர்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் வந்ததில்லை. இவ்வாறான பொய்யான செய்திகள் வெளிவந்த போதும் எந்த ஒரு பத்திரிக்கையும் நம்முடைய கருத்தினை கேட்பதற்கு நம்மை தொடர்பு கொள்ளாதது வேதனை அளிப்பதாக உள்ளது. எல்லாவிதமான தீவிரவாதத்திற்கு எதிராகவும், தேசவிரோத செயல்களுக்கு எதிராகவும் பாப்புலர் ஃபரண்ட் முன் நின்று போராடக்கூடிய இயக்கமாகும்.

மும்பை குண்டு வெடிப்பிற்கு பிறகு மீரட்டிலிருந்து வெளிவரும் பத்திரிக்கையான "தயினிக் ஜகரம்" என்ற பத்திரிக்கை மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இயக்கத்தை தடை செய்துள்ளது என்றும் அதன் தலைவர்கள் இன்று தலைமறைவாகிவிட்டனர் என்று செய்தி வெளியிட்டது. தென் இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான "தி ஹிந்து" பத்திரிக்கை பாப்புலர் ஃப்ரண்ட் தடை செய்யப்படவேண்டிய இயக்கம் என்று வெளியிட்டிருக்கிறது. நடுநிலையான இந்தியக்குடிமகன் பத்திரிக்கையின் இந்த விஷமத்தனமான செய்திகளை நன்கு உணர்ந்து கொள்வான். தேசிய அளவில் செயல்பட்டுவரும் புதிய சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்யப்பட்ட இயக்கம் என்று கூறுவது எதேர்சயாகவோ அல்லது தவறுதலாகவோ கூறப்பட்ட செய்தி அல்ல மாறாக அதன் வளர்ச்சியை தடுப்பதற்காக திட்டமிடப்பட்ட சதியேயாகும். ஆரம்பகாலகட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தென் இந்தியாவில் மட்டுமே இயங்கி வந்த இயக்கமாக இருந்தது. தற்போது சமீபகாலங்களில் இதன் வளர்ச்சி வட இந்தியாவை நோக்கி வேகமாய் பாய்ந்து வருவதன் காரணத்தால் தான் இத்தைகைய பொய் பிரச்சாரங்கள் அரங்கேற்றப்படுகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடி வருகிறது. சுதந்திர தின அணிவகுப்பு, பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலம் சுதந்திர வேட்கையை மக்களின் கொண்டு சேர்க்கின்றது. ஆனால் கடந்த வருடம் கர்நாடகாவில் ஒரு பத்திரிக்கையில் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் ஆக்ஸ்ட் 15 ம் தேதி மைசூரில் பாகிஸ்தானின் தேசியக்கொடியை ஏற்ற முயற்ச்சித்ததாக செய்தி வெளியிட்டது. இத்தகைய முட்டாள்தனமான செய்தியை பத்திரிக்கைகளுக்கு கொடுத்தது அங்குள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவனாவான். ஆனால் மீடியாக்கள் இந்த செய்தி உண்மையானதுதானா? என்பதை ஆராய்ந்து வெளியிடாமல் உடனே பத்திரிக்கையில் பிரசுரித்தது. இதனை கண்டித்துடன் மைசூரில் நடந்தது என்ன? என்பதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்கள் பேட்டி அளித்தத்போது அதனை எந்த பத்திரிக்கையும் பிரசுரிக்கவில்லை. மைசூரில் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை அரசாங்கம் சுதந்திர தினத்தை கொண்டாட விடாமல் தடுத்தையும் எந்த பத்திரிக்கையும் வெளியிடவில்லை.

ஊடகங்களின் பார்வையில் முஸ்லிம்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுவது, தேசியக்கொடியை ஏற்றுவதும் குற்றச்செயலாக பார்க்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு லக்னோவில் பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவரை சுதந்திர தினத்தை கொண்டாட விடாமல் தடுத்து காவல்துறையினரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். இந்த அநீதியான செய்திகளை மக்களுக்கு தெரிவிக்காமல் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் சுதந்திர தினத்தன்று பிரச்சனைகளில் ஈடுபடுவதாக பத்திரிக்கைள் செய்தி வெளியிட்டு வருகிறது.

தற்போது தொலைக்காட்சி செய்தி சேனல்களும் இந்த பந்தயத்தில் சேர்ந்துள்ளன. சமீபத்தில் சிறந்த ஆங்கில தொலைக்காடி செய்தி சேனலான சி.என்.என் கடந்த மே மாதம் 30ம் தேதி செய்தி வெளியிட்டது. அதாவது அல்கொய்தா இயக்கத்திற்கும் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், பாப்புலர் ஃப்ரண்ட் தடைசெய்யப்படுமா? என்றும் செய்தி வெளியிட்டது. மேலும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக செய்தி வெளியிட்டது.

இந்த கட்டுக்கதையின் தொடர்ச்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்தின் உறுப்பினர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டதாகவும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் பிரான்ஸை உருவாக்குவதற்காகவும், அல்கொய்தா இயக்கத்திற்கு உறுப்பினர் சேர்பதற்கு செயல்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. இது மிகப்பெரிய ஆதாரமற்ற அபாண்டமான் குற்றச்சாட்டாகும். பாப்புலர் ஃப்ரண்டிற்கு இந்தியாவை தவிர்ந்து வேறு எங்கும் உறுப்பினர்கள் இல்லை. சி.என்.என் ஐ தொடர்பு கொண்டு கேட்டதற்கு "ரகசிய பாதுகாப்பு படை" தான் இந்த செய்தியை அவர்களுக்கு கொடுத்ததாக கூறியது. பின்னர் கடுமையான நெருக்கடி கொடுத்தவுடன் உள்துறை அமைச்சகம் தாம் இந்த செய்தியை கொடுத்ததாக கூறியது. இப்பேற்பட்ட  பொய்யான் செய்திகள் அந்த நாள் முழுவதும் எல்லா சேனல்களிலும் ஒளிப்பரப்பாகியது. ஆனால் இதற்கான மறுப்பு செய்தி எந்த சேனலிலும் ஒளிப்பரப்பு செய்யப்படவில்லை.

இதிலிருந்து ஊடகங்களில் சில பாப்புலர் ஃப்ரண்டின் மீது அவதூறு பிரச்சரத்தை மேற்கொண்டு வருவதை அறியலாம். முஸ்லிம் சமூகத்தை சக்தி படுத்தவும், நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடி வருகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இவை போன்ற தவறான செய்திகளை சவாலாக எடுதுக்கொள்ளும். வடக்கிலும், தெற்கிலும், மேற்கிலும், கிழக்கிலும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு ஆதரவு பெருகி வருகிறது. அநியாயக்காரர்களால் ஒரு போதும் பாப்புலர் ஃப்ரண்டின் வளர்ச்சியை தடுத்துவிடமுடியாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.


இப்படிக்கு

கே.எம். ஷரீஃப்
தேசிய பொதுச்செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

ஸ்தம்பித்தது மேலப்பாளையம் !



இந்திய சுதந்திர நாட்டில் சுதந்திர அதிகமான போராடிய முஸ்லிம்களுக்கு சுதந்திரம் கொண்டாட கூட அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் சந்தைமுக்கில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 



தமிழக மற்றும் காவல்துறையின் சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய போக்கினை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 17 ஆகஸ்ட் 2011 அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக 17-08-2011 சுமார் 2500 திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் எம்.அன்வர் முஹைதீன் தலைமை ஏற்று வழிநடத்தினார்.


SDPI மாநில தலைவர் தெக்லான் பாக்கவி உரை நிகழ்த்தியபோது
மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் A.S.இஸ்மாயில், தேசிய அரசியல் கட்சி SDPI ன் மாநிலத்தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாக்கவி, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநிலத்துணை தலைவி A. பாத்திமா ஆலிமா, விடுதலை சிறுத்தை கட்சியின் நெல்லை மாவட்ட செயாலாளர் M.C.கார்த்திக் ஆகிய அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்ட தமிழக அரசு மற்றும் காவல்துறையினருக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

விடுதலை கட்சியின் மாவட்ட செயலாளர் கார்த்திக் உரை நிகழ்த்திய போது






நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாபர் ஆலிம் உரை நிகழ்த்திய பொழுது 





நெல்லை மாவட்ட செயலாளர் ஹைதர் ஆலிம் கண்டன உரை நிகழ்த்திய போது





NWF மாநில துணை தலைவி பாத்திமா ஆலிமா உரை நிகழ்த்திய போது

கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர் 








பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் உரை நிகழ்த்திய பொழுது

Wednesday, August 17, 2011

சுதந்திர தின அணிவகுப்பை தடை செய்த மாநில அரசை கண்டித்து அதிரை பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ஆர்ப்பாட்டம்


ஆகஸ்டு 17.அதிரை
பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்த விருந்த சுதந்திர தின அணிவகுப்பை தடை செய்த மாநில அரசை கண்டிக்கும் விதமாக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தPFI யின் தலைமை முடிவெடுத்தது அதன் பேரில் இன்று மாலை 4 மணியளவில் நமதூர் பேருந்து நிலைய வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை PFI நகர கிளை நடத்தியது இதில் SDPI மாநில செயலாளர் அபூபக்கர் சித்தீக் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான கண்டன குரலை பதிவு செய்தனர் இதில் மமக மாவட்ட செயலார் ஷாகுல் ஹமீத் அவர்களும் கலந்து கொண்டு போராட்ட குரல் எழுப்பினார் 


இறுதியாக கண்டன உரை நிகழ்த்திய அபூபக்கர் சித்திக் நாம் பெற்ற இந்த சுதந்திரத்தை நாம் கொண்டாட அனுமதி மறுத்த மாநில அரசை கண்டித்து உரை நிகழ்த்தினார் இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர் .

Tuesday, August 16, 2011

அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக முஸ்லீம் சமூகத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் வகையிலும் நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு இரத்தம் சிந்திய நமது சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும்  விதமாகவும் அவர்களின் தியாகங்களை பெருமைபடுத்தும் விதமாகவும் இந்த வருட அணிவகுப்பை நெல்லை மேலப்பாளையத்தில் நடத்த இருந்தது 



இந்த பேரணியை திடீர் என்று ரத்து செய்து மாநகர காவல் துறை அவசர அறிவிப்பு செய்ததின இதனால்அதிர்ச்சி  அடைந்த PFI யின் நிர்வாகிகள் அவசர ஆலோசனை செய்து வரும் ஆகஸ்ட்டு 17 ம் நாள் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்ட மிட்டுள்ளனர் .


அதன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட்டு  17 அன்று மாலை 4 மணியளவில்  நமதூர் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர நிர்வாகிகள் கூறினார்கள். 


இந்த அராஜக போக்கை கண்டிக்க அனைவரும் ஆர்பரித்து வர PFI கேட்டு கொண்டுள்ளது .

மறுக்கப்படும் இந்திய முஸ்லிம்கலின் சுதந்திரம்!

INDIAN-MUSLIM 1
சுதந்திர தினத்தன்று தமிழகத்தின் தென்மாவட்டமான நெல்லையின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருந்த அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
முந்தைய ஆட்சியின் போதும் கடந்த 3 ஆண்டுகளாக பொதுவான இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உள் அரங்கு மைதானங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தை ஆளும் அரசுகளின் இத்தகைய அராஜக போக்கு இந்திய அரசியல் சட்டம் உறுதி அளிக்கும் குடிமக்கள் உரிமைகள் குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.
அணிவகுப்பை தடுப்பதற்கு தமிழக அரசின் காவல்துறை கையாண்டுவரும் நடவடிக்கைகளும், அதற்காக முன்வைக்கும் நியாயங்களையும் ஆராய்ந்தால் இதன் பின்னணியில் குறுகிய மனம் படைத்தோரின் விருப்பங்கள் வெளியாகும்.
ஒரு பொது தத்துவத்தின் அடிப்படையிலோ, சட்டம்-ஒழுங்கை பேணவேண்டும் என்ற அடிப்படையிலோ இத்தடை விதிக்கப்படவில்லை. முன்னரே தயார் செய்யப்பட்ட திரைக் கதையின் அடிப்படையிலேயே பாரபட்சமாகவும், ஜனநாயக விரோதமாகவும் கையாண்ட இந்த தடை நடவடிக்கைக்கு பின்னணியில் யாருடைய கரங்களோ விளையாடிக் கொண்டிருப்பது நிரூபணமாகிறது.
முதலாவதாக இந்நடவடிக்கை இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 21-ன்படி கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும். அரசியல் சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமைகளுக்கான பாதுகாப்பை வெளிப்படையாக மீறும் செயலாகும்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  போராட்டங்கள், மாநாடுகள், தெருமுனைக் கூட்டங்கள், அணிவகுப்புகள், பேரணிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இந்நிகழ்ச்சிகள் ஒன்றில்கூட பிற மதங்களுக்கு எதிரான கருத்துக்கள் பரப்புரைச் செய்யப்பட்டதில்லை. பொதுமக்களுக்கு சிறு இடையூறும் ஏற்பட்டதில்லை. மாறாக, பொதுமக்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நற்பணிகளுக்கு ஆதரவு அளித்தே வருகின்றனர்.
இந்நிலையில் சுதந்திர தினத்தன்று நடத்தப்படும் அணிவகுப்பிற்கு மட்டும் தொடர்ந்து தடைவிதித்துவருவதன் அவசியம் என்ன? என்பதுதான் நடுநிலையாளர்களின் உள்ளத்தில் எழும் கேள்வியாகும்.
இந்தியாவில் வாழும் மத சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி இந்த தேசத்திற்கே ஆபத்தாக செயல்படும், இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியடிகளையே கொலைச் செய்த கும்பல்தான் ஆர்.எஸ்.எஸ் என்ற ஹிந்துத்துவா பாசிச பயங்கரவாத இயக்கம். இந்த பாசிச விஷவிருட்சத்தின் தலைவர்கள் இந்த தேசத்தின் முன்னேற்றத்திலோ ஏன் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் கூட சிறிதளவு கூட பங்களிப்பை செய்யவில்லை என்பது வரலாறு கூறும் உண்மையாகும். இந்நிலையில் இவர்கள் எதிர்க்கின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தமிழக அரசு தடை விதிக்கும் என்றால் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது நடத்திவரும் அரை ட்ரவுஸர் அணிவகுப்பிற்கும், நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்க தமிழக அரசு முன்வருமா?
முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முழுமையான சக்திப்படுத்தலை லட்சியமாக கொண்டு செயல்படும் அமைப்புதான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. சமூகங்களை சக்திப்படுத்தும் முயற்சிகளுக்கு தூண்டுகோலாக பல்வேறு சமூக சேவைகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆற்றிவருகிறது. சமூக சேவைகள், கல்வி சேவைகள், மனித உரிமை தளத்தில் ஆற்றும் பணிகள் எல்லாம் இவற்றின் ஒருபகுதியாகும். அரசியல் வாழ்க்கையின் தேசிய நீரோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட அடித்தட்டு மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் வழிகாட்டி, அரசியல் புனர்நிர்மாணத்திலும், சுய வலிமைப்படுத்துதலிலும் அவர்களுக்கு ஆதரவு அளித்தும் பணிகளை முன்னெடுத்துச் சென்றுக்கொண்டிருக்கிறது இவ்வியக்கம்.
சுதந்திர உணர்வும், சுய உணர்வும் கொண்ட ஒரு சமூகத்தால் மட்டுமே தன்னை வலிமைப்படுத்த இயலும் என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் கருதுகிறது. இத்தகையதொரு சுதந்திர உணர்வை உருவாக்கி அவர்களை தேசிய நீரோட்டத்தின்பால் கைப்பிடித்து அழைத்துவருவதன் மூலமே இதனை சாதிக்க முடியும். சொந்த உரிமைகளை குறித்தும், கடமைகளை குறித்தும் உணர்வுடைய ஒரு சமூகமாக ஒடுக்கப்பட்ட சமூக மக்களை மாற்றுவதற்கு அவர்களை தேசிய தினங்கள் மற்றும் சின்னங்களுடன் ஒன்றிணைக்க வேண்டியது அவசியமாகும்.
அறுபது ஆண்டுகளை கடந்து சுதந்திரத்தின் உற்சாகமான நிமிடங்களை உட்கொண்டு கடந்து செல்கிறது நமது நேசத்திற்குரிய தேசம். சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான உரிமை கூட மறுக்கப்படும் ஒரு சமூகத்தின் மன வேதனைகளும், அது உயர்த்தும் ஏராளமான கேள்விகளும் நம்மை உற்றுநோக்கி தேசம் ஒரு ஆபத்தான கட்டத்தில் செல்வதை உணர்த்துகின்றன.
20 கோடி எண்ணிக்கையிலான இந்திய முஸ்லிம்களின் கண்ணீரும், குருதியும் கலந்த சோக கதைகள் இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்தே தொடரத்தான் செய்கிறது. பலரின் சொந்த விருப்பங்களுக்காக இந்த தேசம் துண்டாடப்பட்டபோது பிறந்த மண்ணிலேயே மரணிக்க விரும்பி இந்தியாவிலேயே தங்கிய முஸ்லிம்களுக்கு, பிரிவினையின் பழியையும், அது உருவாக்கிய தாழ்வு மனப்பாண்மையையும் பாரமாக பல தலைமுறைகள் சுமக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.
1757 மற்றும் 1857-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சுதந்திர போராட்டங்களில் உயிரையும், பொருளையும் அர்ப்பணித்து பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜியத்துடன் போராடியவர்களின் வாரிசுகள் பொதுவாழ்க்கையின் விளிம்புகளில் ஓரங்கட்டப்பட்டு சொந்த தாய்நாட்டில் அந்நியரைப்போல வாழவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
அறிவும், ஆற்றலும் மிக்க தலைவர்கள் இல்லாததும், சமூகத்தின் ஒடுக்கப்பட்ட சூழலும் ஒன்றிணைந்தபோது மேலும் மேலும் முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து புறந்தள்ளப்பட்டனர். தனிமைப்படுத்தல் மற்றும் பாரபட்சத்தின் இராப்பகல்கள் இந்திய முஸ்லிம்களை வேட்டையாடியது. இப்பொழுதும் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.
சுதந்திரத்திற்கு பிறகு முஸ்லிம்களை சரியான திசையை நோக்கி வழிநடத்தவோ, இதர சமூகத்தினருடன் அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்லவோ சரியானதொரு செயல்திட்டத்துடன் கூடிய அமைப்புகள் தேசிய அளவில் உருவாகவில்லை. மாநிலங்கள் அளவிலான முஸ்லிம் அமைப்புகளோ குறுகிய செயல்திட்டங்கள், விருப்பங்களின் அடிப்படையில் சுருங்கிக்கொண்டன. இத்தகைய அமைப்புகள் கூட கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே உருவானவையாகும்.
முஸ்லிம் இந்தியாவின் விசால பிரதேசமான வட இந்திய மாநிலங்களில் குறிப்பிட்டு சொல்லும் அளவிலான நவீன எழுச்சி இயக்கங்கள் உருவாகவில்லை. இத்தகையதொரு மோசமான சூழல் இந்திய முஸ்லிம்கள் மத்தியில் நிலவிய வேளையில்தான் தொடர்ந்து நடந்த வகுப்புவெறி கலவரங்கள் மூலமாக வலதுசாரி ஹிந்துத்துவா பாசிஸ்டுகள் கொடூரமான தாக்குதல்களை அவர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டனர். இவையெல்லாம் ஒன்று சேர்ந்து மிகவும் நெருக்கடியில் ஆழ்த்தப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தை சவால்களை எதிர்கொண்டு வழிநடத்த துணிச்சலான தலைமையோ தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்கங்களோ உருவாகவில்லை.
பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் முஸ்லிம்களின் வாழ்வு கேள்விக்குறியானது. அப்பொழுது இந்தியாவில் செயல்பட்ட முஸ்லிம் அமைப்புகள் செய்வது அறியாது திகைத்து நின்றன. இச்சூழலில்தான் காலக்கட்டத்தின் தேட்டமாக உயர்ந்த நவீன எழுச்சி சிந்தனைகள் சிறு கூட்டங்களாக உருவெடுத்தன. பின்னர் அவை கட்டமைக்கப்பட்ட இயக்கங்களாக மாறின. அவற்றின் ஒட்டுமொத்த உண்மையான உருவமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உருவானது.
தீவிரவாதிகளாகவும், மாற்றத்தை விரும்பாதவர்களாகவும், அந்நியர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தை தேசிய நீரோட்டத்தின்பால் அழைத்து வருவதற்கான முயற்சியைத்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொறுமையுடன் மேற்கொண்டுவருகிறது.
கேரளாவில் துவங்கி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என தென்னிந்திய மாநிலங்களிலும், தொடர்ந்து வட இந்தியாவின் பல மாநிலங்களிலும் காலடிகளை எடுத்துவைத்து படிப்படியான வளர்ச்சியை பெற்றுவருகிறது பாப்புலர் ஃப்ரண்ட். பிரிந்துகிடந்த சமூகம், கல்வியறிவு இல்லாத சமுதாயம் கட்டுப்பாடும், கட்டமைப்புடன் கூடிய ஒரு இயக்கமாக மாறுவதையும் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயல்படுவதையும் முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே கண்டுவந்த அரசியல் கட்சிகளும், முஸ்லிம்களை அழித்தொழிப்பதையே தொழிலாக கொண்டுள்ள ஹிந்துத்துவா பாசிச இயக்கங்களும் முற்றிலும் விரும்பாது என்பது உண்மையாகும்.
தீவிரவாத முத்திரைக்குத்தி இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த ஊடகங்களின் துணையுடன் பொய் வழக்குகளையும், அறிக்கைகளையும் உருவாக்கி சிக்கவைப்பதற்கான முயற்சிகளை சில மாநிலங்களில் போலீஸ்-உளவுத்துறை அதிகாரமையங்கள் மேற்கொண்டு வருகின்றன.
சுதந்திர தினம் போன்ற தேசிய தினங்களை உளமார கொண்டாட முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரிவினர் முன்வருவது அதிகார வர்க்கத்திடம் காழ்ப்புணர்வை உருவாக்குவது இயல்பே. முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகவும், வெடிக்குண்டை தயாரிப்பவர்களாகவும் வாழவேண்டும் என்பதுதான் பாசிஸ்டுகளைப் போலவே சில அரசியல்,அதிகார வர்க்கத்தினர் விரும்புகின்றனர். இவ்வேளையில் அவர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுவதும், தேசிய நீரோட்டத்தில் சொந்தமாக இடத்தை தேடுவதும் அத்தகையோரை பதட்டமடைய வைக்கிறது. இத்தகைய காழ்ப்புணர்வும், அல்லது முஸ்லிம் நவீன சமூக இயக்கத்தைக் குறித்த பீதியும் தான் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளை தடைச்செய்ய இவர்களை தூண்டுகிறது.
இந்நிலையில் அன்னாஹஸாரே  வலுவான லோக்பால் மசோதாவிற்காக தான் நடத்தவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடிகளை போடுவதை தொடர்ந்து பிரதமரை நோக்கி எழுப்பிய, ’அடிப்படை உரிமைகளை முற்றிலும் மறுத்துவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு நீங்கள் செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றுகின்றீர்கள்’ என்ற கேள்வியை நாம் தமிழகத்தை ஆட்சி புரியும் முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி கேட்கிறோம்’ ஒரு சமூகம் தமது தேசம் பெற்ற சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு மறுத்துவிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் மூவர்ண தேசிய கொடியை எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஏற்றினீர்கள்?’

Saturday, August 13, 2011

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது என கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.


கோழிக்கோடு:சுதந்திர தினத்தன்று ஆண்டுதோறும் கேரள மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திவரும் அணிவகுப்பிற்கு தடை ஏற்படுத்திய அரசின் நடவடிக்கையை உறுதிச்செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது என கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முந்தைய இடதுசாரி அரசின் குறுகிய அரசியல் விருப்பங்களை முன்னிறுத்தி கடந்த ஆண்டு சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசும் அதே பாதையை பின் தொடர்ந்து அனுமதியை மறுத்துள்ளது. மாநில போலீஸ் மற்றும் அதிகார வர்க்கத்திடம் ஆழமாக வேரூன்றியுள்ள வகுப்புவாத மனோநிலைதான் சுதந்திர தின அணிவகுப்பை தடைச் செய்வதன் பின்னணியிலும் செயல்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பின் பெயரால் பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தடை விதித்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு முதல் நடத்திவரும் சுதந்திர தின அணிவகுப்பில் ஒரு இடத்தில் கூட சட்டம்-ஒழுங்கிற்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. நிலைமை இவ்வாறிருக்க இத்தடை பாரபட்சமானது மட்டுமல்ல ஜனநாயக விரோதமானதும், குடிமக்களின் சுதந்திரத்தை மறுப்பதுமாகும்.
நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட எல்லா குடிமக்களுக்கும் பிரிவினருக்கும் உரிமையுண்டு. இந்த உரிமைதான் இங்கு மறுக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட நினைவுகளை உணர்த்தி தேசத்தின் மீதான பற்றிற்கு உத்வேகம் அளித்த சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி பெரும் மக்கள் பங்களிப்பையும், வரவேற்பையும் பெற்றது. சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான உரிமை கிடைக்கும் வரை சட்டரீதியாகவும், ஜனநாயகரீதியாகவும் போராட்டம் தொடரும். இக்கூட்டத்திற்கு கேரள மாநில தலைவர் மெளலவி அஷ்ரஃப் தலைமை வகித்தார். பி.அப்துல்ஹமீத், டி.கெ.அப்துஸ்ஸமத், கெ.ஹெச்.நாஸர் ஆகியோர் உரையாற்றினர்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More