
ஏடிஎம் இயந்திரங்களை திறக்க மொத்தம் 12 ரகசிய எண்களை அழுத்த வேண்டும். அதில் 6 எண்கள் ராணாவிடமும் மீதி 6 எண்களை பிரதீப்பிடமும் செக்யூரிட்டி மேலாண்மை நிறுவனம் கொடுத்தது. இரு வரும் சேர்ந்து இந்த 12 ரகசிய எண்களையும் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கினால்தான் ஏடிஎம் இயந்திரம் திறக்கும்.
அதன் பிறகு அதில் ரூபாய் நோட்டுக்களை அடுக்கு வைத்து விட்டு இருவரும் அடுத்த இயந்திரத்துக்கு செல்வார்கள். இவர்கள் இருவரின் வசமும் மொத்தம் 13 ஏடிஎம் களில் ரூபாய் நோட்டுக்களை நிரப்பும் பணி ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டதால் ஏடிஎம் களின் ரகசிய எண்களை ஒருவருக்கொருவர் தெரிவித்து கொண்டனர். சில சமயம் யாராவது ஒருவர் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ஒருவரே சென்று ஏடிஎம் இயந்திரங்களில் ரூபாய் நோட்டுக்களை நிரப்புவார்கள்.
ஏடிஎம் இயந்திரத்தை திறக்கும் எல்லா ரகசிய எண்களை தெரிந்து கொண்டதும் ராணாவின் மனதில் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே தனது நண்பர் அரவிந்தர் சிங்கை அழைத்துக் கொண்டு மங்கோல்புரி பகுதியில் உள்ள கோடக் மகேந்திரா ஏடிஎம் க்கு சென்றார். அரவிந்தர் சிங்கை காவலுக்கு வைத்து விட்டு, ரகசிய எண்களை அழுத்தி அந்த ஏடிஎம் இயந்திரத்தை திறந்தார். பிறகு அதில் இருந்த எல்லா பணத்தையும் கொள்ளையடித்தார்.
இந்த கொள்ளையை முடித்ததும் அவரது மனதில் மேலும் ஆசை துளிர்விட்டது. உடனே ரோகிணி உட்பட 12 இடங்களில் இருந்த கோடக் மகேந்திரா ஏடிஎம் களை திறந்து அதில் இருந்த எல்லா பணத்தையும் மாலைக்குள் ஒட்டு மொத்தமாக கொள்ளையடித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இந்த சம்பவம் ஜூலை 30 ம்தேதி நடந்தது. வழக்குப் பதிவு செய்து போலீசார் ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவரது பெயர் பப்லு என்றும் ஏடிஎம் கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் டெல்லி ஐஎஸ்பிடி அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ராணாவையும் அரவிந்தர் சிங்கையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் 13 ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து மொத்தம் ஸி1.14 கோடி கொள்ளையடித்ததை ராணா ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரையும் அரவிந்தர் சிங்கையும் போலீசார் கைது செய்தனர்.
ராணாவிடம் இருந்த ஸி92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment