சட்டசபையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் புத்திசந்திரன் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
போலி குடும்ப அட்டைகள் மூலம் நடக்கும் தவறுகளை தடுக்கவும், புதிய அட்டை பெறுதல், முகவரி மாற்றம் ஆகியவைகளை எளிய நடைமுறை மூலம் செயல்படுத்துவதும் அவசியமாகிறது. இதன் அடிப்படையில் இவற்றை கண்காணிக்க ஒட்டுமொத்த மின் ஆளுமை முறை மூலம் தீர்க்க உத்தேசிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக ஒரு கண்சல் டன்ட் நிறுவனம் நியமனம் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் முழுமையான மின்னணு நிர்வாகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது ரேஷன் அட்டை வைத்துள்ள அட்டைதாரர்களின் பிரத்யேக குறியீடுகளை பதிவு செய்தல், நியாயவிலை கடைகளில் பொருள்கள் வாங்க வரும்போது அட்டை தாள்களின் குறியீடுகளை கண்டறிய உரிய சாதனங்களை அமைத்தல், வட்ட அலுவலகங்களில் நடைபெறும் ரேஷன் அட்டை தொடர்பான மாற்றங்கள், நியாயவிலைக் கடைகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதும் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
மாநில அரசு இந்திய கணக்கெடுப்பு பதிவாளரிடம் உடற்கூறு முறையில் தகவல்களை பதிவு செய்யும் பணியை ஒப்படைத்து, அந்த பதிவுகளை பயன் படுத்திக் கொள்ள உத்தேசித்துள்ளது. குறியீடுகளை பதிவு செய்யும் முறை 7 வட்டங்களில் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த பணி முடிவடைவதை எதிர்நோக்கி தற்போதுள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் 31.12.2011 வரை நீடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ரேஷன் கார்டுகளில் 2 லட்சத்து 65 ஆயிரத்டது 22 குடும்ப அட்டைகள் போலி என கண்டறிந்து ரத்து செய்யப்பட உள்ளது.
31 மாவட்டங்களில் 14 லட்சத்து 29 ஆயிரத்து 374 குடும்ப அட்டைகள் போலி என கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது
0 comments:
Post a Comment