தியாக திருநாள் நல்வாழ்த்துகல்(அதிரை ரிபோர்டு நண்பர்கள்)

HTML lessons

Saturday, August 13, 2011

இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தை இழந்தது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்ஹாமில் நடந்தது. 4ம் நாள் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்தது. காம்பீர் 14 ரன்களுக்கும், டிராவிட் 18 ரன்களுக்கும், லஷ்மண் 2 ரன்களுக்கும், ரெய்னா 10 ரன்களுக்கும் அவுட்டாயினர். சச்சின் டெண்டுல்கர் 40 ரன்களுக்கு ரன் அவுட்டானார். அமீத் மிஸ்ரா 22 ரன்களுக்கும், பிரவீண் குமார் 40 ரன்களுக்கும், இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாயினர். 

இந்திய அணி சார்பில் கேப்டன் தோனி மட்டும் சிறப்பாக விளையாடி 74 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தை இழந்தது.


0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More