தியாக திருநாள் நல்வாழ்த்துகல்(அதிரை ரிபோர்டு நண்பர்கள்)

HTML lessons

Tuesday, August 30, 2011

கல்லறைகளும் காவியமாகும்! – ஒரு கஷ்மீரத்து உளக்குமுறல்


நெஞ்சிலே நெருஞ்சி முட்களும்,
வயிற்றிலே நெருப்புகங்குகளும்
நெற்றியிலே தோட்டாக்களும்
சுமப்பது என்னவோ
நாங்கள் பெற்ற வரமோ?

உங்கள் வீரத்தை நிரூபிக்க
எங்களின் உயிர்கள் விளைநிலமாகின
உங்கள் தேசபக்திக்கு
எங்கள் மண் பலிகடாவானது!
எங்களின் கற்புகள்
உங்களின் வேள்விக்கு விறகாக மாறியன!

உங்கள் துரோகத்தின் பிழைகள்
எம் சந்ததியினரின் உள்ளங்களில்
இழைகளாக நிழலாடும்

உயிர்களை பறிப்பதால்
உணர்வுகளை அடக்கிவிடலாம் என
கனவு காண்கின்றீர்!
நெருப்பு உலைகளில் ஏற்றினாலும்
எங்கள் உணர்வுகள் உருக்குலையாது!

உளக்குமுறல்களை வெளிப்படுத்தினால்
உள்நாட்டு கலவரம் என்கின்றீர்!

கல்லறைகளில் புதைப்பதால்
எங்களின் கனவுகள் அஸ்தமிக்காது
இனி எம் கல்லறைகளும் காவியமாகும்!
ஒரு நாள் எங்கள் கஷ்மீர் மீண்டும்
ஓவியமாகும்!

-ஆயிஷாமைந்தன்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More