நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளது கூடன்குளம் அணுமின்நிலையம். இதன் இரண்டு மின் உலைகளில் ஆயிரம் மெகாவாட் கொண்ட மின் உற்பத்திக்கான கட்டுமானப்பனிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது.இந்த வருட இறுதிக்குள் அணுமின் நிலைய உலை செயல்பட இருக்கிறது. இந்நிலையில் அணுமின் நிலையம் மின் உற்பத்தியை தொடங்கினால் கூடன்குளம் மற்றும் இனிந்தகரை கிராம மக்கள்வெளியேற்றப் படுவார்கள் என்றும்,அனு உலையில் விபத்து ஏற்பட்டால், மக்களை காப்பாற்ற பூர்வாங்கபாதுகாப்பு பணிகள் எதுவும் செய்யவில்லை என்கிற தகவல் பரவுவதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
எனவே கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி இனிந்தகரை கிராம மக்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன்படி 1500 மீனவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிகளுக்கு அனுப்பவில்லை.
ஊர்மக்கள் சார்பில் 70 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன்படி வரும் 14ம் தேதி இனிந்தகரையில் அணு உலைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் கூடன்குளம் மற்றும் இனிந்தகரை பகுதியில் பதட்டம் நிலவுவதால் மாவட்ட எஸ்.பி,. விஜயேந்திரபிதாரி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.




0 comments:
Post a Comment