ஆஸிம் பிரேம்ஜி இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு இலவச முன்மாதிரி பள்ளிக் கூடங்களை ஆரம்பிக்க திட்டம்.
இந்தியாவின் மூன்றாவது பணக்காரர், தன்னுடைய சொந்த செலவில் நடத்தப்படும் Azim Premji Foundation (APF)மூலமாக நல்லெண்ணத்தின் தொடக்கமாக, நாடு முழுவதும் மாவட்டத்திற்கு இரண்டு என்று, 1300 இலவச பள்ளிக்கூடங்களை, கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த பள்ளிக்கூடங்கள் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியுடன் மற்றும் கல்வித்திட்டத்துடன் இணைக்கப் பெற்றதாகவும் இருக்கும். இந்த திட்டம் வெற்றி பெற்றால், இந்தியாவின் பொதுவான கல்விக் கொள்கைக்கு சவாலாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற செல்வமிகுந்த தொழிலதிபர்களுக்கு உந்துதலாகவும் இருக்கும்.
இந்த பள்ளிக் கூடங்கள் வழக்கமான 1 முதல் 12 வரையிலான வகுப்புகளை கொண்டிருக்கும். ஒரு வளர்ந்த நாட்டின் அடிப்படைத் தேவையான தரமான கல்வி மட்டுமே மற்ற பள்ளிக் கூடங்களில் இருந்து மாறுபட்டிருக்கும் என்று ஆஸிம் பிரேஜி கூறினார். விப்ரோவின் APFஆல் 2001 ல் தொடங்கப்பட்டு, சமீபத்தில் அதன் வளர்ச்சித் திட்டங்களை மீளாய்வு செய்தபோது, 1300 பள்ளிக்கூடங்கள் திட்டம் உதயமானது. ICSE/CBSE போல ஒரு தனிப்பட்ட கல்விக் குழுமத்தை அமைப்பது எங்களுடைய ஒரு குறிக்கோள் என்று APFன் CEO திலீப் ரஞ்சேகர் கூறினார்.
சுகாதாரம் மற்றும் ஊட்டச் சத்தோடு கூடிய மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிதான் இந்த பள்ளிக் கூடங்களின் நோக்கமாக இருக்கும் என்று இந்த 9,000 கோடி ரூபாய் திட்டத்தோடு தொடர்புடையவர்கள் தெரிவித்தனர். எங்களுடைய இந்த முயற்சி, கல்வியிலே வளர்ச்சியடையாத இடங்களில் இந்த பள்ளிக் கூடங்களை நிறுவுவது தானே தவிர தற்போது உள்ள பொது மற்றும் தனியார் பள்ளிகளோடு போட்டியிடுவதற்கல்ல என்றும் திலீப் அவர்கள் கூறினார்கள்.
கர்நாடகா, ராஜஸ்தான், உத்தர்காண்ட் மாநிலங்களில், ஒன்றரை வருடத்தில் 7 பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்படும். எதிர்பார்ப்பது போல் எல்லாம் சரியாக நடக்கும்போது, 2025 ம் வருடத்தில் 1300 பள்ளிக் கூடங்களும் இயங்க ஆரம்பித்துவிடும். மற்ற பள்ளிக் கூடங்களுக்கு, தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை கொடுப்பதற்கும், நம்மை நாமே தரமான கல்வியை கற்று போதிப்பதற்கு ஆட்படுத்திக் கொள்வதற்குமான இரட்டை கொள்கைதான் இந்த பள்ளிக் கூடத்தின் பின்னனியில் உள்ளதாகும்.
நன்றி: டைம்ஸ் ஆஃப்ஸ் இந்தியா
0 comments:
Post a Comment