நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் செங்கோட்டை பகுதியில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றுகிறார்.
எனவே, செங்கோட்டை அமைந்துள்ள பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு நடத்தியதால் சுதந்திர தின விழா பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதாக டெல்லி போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் சத்தியேந்திர கார்க் தெரிவித்தார்.
விழா நடைபெறும் செங்கோட்டையில் மட்டும் 40 ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
விழா நடைபெறும் 90 நிமிடங்களுக்கு செங்கோட்டைக்கு மேலே வானத்தில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது





0 comments:
Post a Comment