யார் இந்த மல்கம் எக்ஸ்?

மார்ட்டின் லூதர் கிங்கும், மல்கம் எக்சும் முக்கியமானவர்களாய் கருதப்படுகின்றார்கள். இருவரும் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதிகளில் (60களில்) மிகத் தீவிரமாய் இயங்கியவர்கள். அத்துடன் இருவருமே அவர்களின் நாற்பது வயதுகளை எட்டமுன்னராகவே படுகொலை செய்யப்பட்டவர்கள். 1992 இல் “Malcolm X” என்ற திரைப்படம் வெளியானது. இது மல்கம் எக்சின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்.
அன்றைய நேரம் அத்திரைப்படத்தை என்நண்பர்கள் மூவருடன் Lawrence & Markham த்தில் இருந்த Famous players இல் பார்த்ததை நினவு கூருகிறேன்.
மல்கமின் வாழ்க்கைச் சம்பவங்களினூடாக அன்றையகால கறுப்பின மக்களின் போராட்டங்களையும் தத்தளிப்புக்களையும் எழுச்சிகளையும் -அரைநூற்றாண்டு கடந்தபின்னரும் அத்திரைப்படம் மூலம் நேரில் பார்த்து மாதிரி அறியக்கூடிதாக இருந்தது. இன்றும் அவரின் சிரார்த்த தினம் அன்று அவரின் திரைப்படத்தை கனடிய தொலைக்காட்சியில் போட்டவிடத்து அவரை, அவரின் போராட்ட குணாம்சங்களை நினைவு கூறுமிடத்து தமிழக எழுத்தாளர் ரவிக்குமார் “மால்கம் எக்ஸ்” எனும் நூலைத் தொகுத்துள்ளார். அதில் அவரின் தொகுப்பிலிருந்தும் எனது இணையங்களின் தேடல்க்களுமிருந்தும் எனது “மல்கம் எக்ஸ்” பற்றிய சிறு புரட்டல்களை காலத்தின் தேவை கருதி இத்தருணத்தில் வாசகர்களுடன் பகிர்கிறேன்……….
யார் இந்த மல்கம் எக்ஸ்?
இன்றைய அமெரிக்க ஜனாதிபதி பராக் உசேன் ஒபாமாவிற்கு முன் அமெரிக்க கறுப்பினத்தவர்களின் வரலாற்றில் அமெரிக்க கறுப்பினத்தவரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர், இவர் பிறந்த காலத்தில் இறந்தவர், அவர்தான் Malcolm X.
மால்கம் மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கினார். அவருடைய ஆழ்ந்த அறிவு, விரிந்துக் காணப்பட்டு இருக்கும் அறிவு கேட்போரை பிரமிக்க செய்தது. அவருடைய பேச்சுகளை கெட்டு கறுப்பினர் மட்டும் அல்ல வெள்ளையர்களும் எப்படி ஓர் தனிமனிதனாக இப்படி பட்ட ஏராளமான மக்களை கவர முடிந்தது என்று வியந்தனர். மால்கமின் ஓர் சொல்லிற்கு
எண்ணற்று கறுப்பர்கள் பின்னால் நின்றார்கள்.
அவரின் ஆரம்ப காலத்தை எடுத்துக்கொண்டால், மல்கம் சமூக செயற்பாட்டாளருக்கு மகனாய்ப் பிறந்திருந்தாலும், அவரது தகப்பனார் வெள்ளையினத் துவேசக்காரர்களால் -விபத்து என்று சோடிக்கப்பட்டு- மல்கமின் இளவயதிலேயே கொல்லப்பட, மிகுந்த ஏழ்மையுடன் ஏனைய எட்டு சகோதர்களுடன் மல்கம் வளர்கின்றார். கணவரின் இறப்பு, வறுமை போன்றவற்றால் மல்கமின் தாயாரும் மனப்பிறழ்வுக்கு ஆளாக, மல்கமும் அவரது சகோதர்களும் வெவ்வேறு இடங்களில் வாழத்தொடங்குகின்றார்கள்.
Malcolm X was born in Omaha, Nebraska. By the time he was thirteen, his father had died and his mother had been committed to a mental hospital. His childhood, including his father’s lessons concerning black pride and self-reliance and his own experiences concerning race, played a significant role in Malcolm X’s adult life.
இளவயதிலேயே வன்முறை, போதைமருந்துகடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு இருபதுகளின் ஆரம்பத்தில் மல்கத்திற்கு -ஒரு திருட்டுக் குற்றத்திற்காய்- பத்தாண்டு சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றது. சிறையில் அறிமுகமான விரிவான புத்தக வாசிப்பால் மல்கம் ஆளுமை மிக்க மனிதராய் சிறைக்குள் வளர்கின்றார். After living in a series of foster homes, Malcolm X became involved in hustling and other criminal activities in Boston and New York. In 1946, Malcolm X was sentenced to eight to ten years in prison. அடிப்படைவாத கிறிஸ்தவம் கூட கறுப்பினத்தவர்களை ஒடுக்குகின்றது என்று தெளிந்து, அதற்கு மாற்றாய் இஸ்லாமை மல்கம் தேர்ந்தெடுகின்றார். இதற்கு வழிகாட்டியாக எலிஜா என்ற இஸ்லாமிய போதகர் மல்கத்திற்கு வாய்க்கின்றார். ஏழாண்டுகளின் பின் சிறையில் இருந்து வெளியே வருகின்ற மல்கம், தீவிரமாய் இஸ்லாமை கறுப்பின மக்களிடையே பரப்ப முயற்சிக்கின்றார். ஜநூறு அங்கத்துவர்களுடன் இருந்த நேசன் ஒஃப்வ் இஸ்லாம் மல்கமின் கடின உழைப்பால், பத்தாண்டுகளுக்குள் 30 000 மேற்ப்பட்டவர்களை அங்கத்துவராய்க்கொண்டு பிரமாண்டமாய் வளர்கின்றது. படிப்படியாக ஒரு ஆளுமைமிக மனிதவுரிமைச் செயற்பாட்டாளாராக மல்கம் உருவெடுக்கின்றார். கறுப்பர்களுக்கு என்று தனியான கல்வி பொருளாதாரம் இன்னபிற அடிப்படை வசதிகள் தேவை என்ற கறுப்பு தேசியத்தை மல்கம் கடுமையான மொழியில் முன்வைக்கின்றார். அதே நேரத்தில் மிகவும் கலகமான உரைகளின் மூலம் அடிமைப்படுக்கிடந்த கறுப்பின மக்களின் ஆன்மாவை விழிப்புறச்செய்கின்றார். While in prison, Malcolm X became a member of the Nation of Islam. After his parole in 1952, he became one of the Nation’s leaders and chief spokesmen. For nearly a dozen years, he was the public face of the Nation of Islam. Tension between Malcolm X and Elijah Muhammad, head of the Nation of Islam, led to Malcolm X’s departure from the organization in March 1964.
இதற்கிடையில், ஆபிரிக்காவில் இருந்து அடிமைகளாக்கப்பட்ட கறுப்பினமக்களின் கலாச்சார வேர்களை முழுதாக அறியச்செய்யாது இருப்பதற்கே, திட்டமிட்டு வெள்ளை இனத்தவர்கள் வேறு பெயர்களை கறுப்பினத்தவர்களுக்கு சூட்டி அழைக்கின்றார்கள் என்ற புரிதல் மல்கமிற்கு வருகின்றது.
இதன் இரகசியம் என்னவென்றால், உலகில் மற்ற இனத்தில் தங்களுடைய பெயர்களுடன் தங்கள் குடும்பப் பெயர் இணைந்திருக்கும். ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கோ தங்களை அடிமையாக வைத்திருப்பவர்களின் பெயரை இணைக்க வேண்டும். ஒவ்வொரு கறுப்பின மனிதனுக்கும் விதிக்கப்பட்ட இக்கொடுமையை என்னவென்று விவரிப்பது?
மல்கம் எக்ஸ் [Malcolm X] கேட்கிறார். “நான் யாருக்கும் அடிமையில்லை
என் பெயருக்குப் பக்கத்தில் என்னை அடிமைப்படுத்தியவனின் பெயரை இணைக்க விரும்பவில்லை.”
அவ்வாறான வெள்ளையினத்தவர்களின் பெயர்களை மறுதலிப்பதற்காய், மல்கம், தனது லிட்டில் (Little) என்ற பெயரை எக்ஸ் (X) ஆக மாற்றுகின்றார். தொலைந்து போய்விட்ட தனது கலாச்சார வேரை, அந்த எக்ஸ் (X) என்ற எழுத்தில் அடையாளப்படுத்துகின்றார். அதன்பின் அமெரிக்க கறுப்பர்களில் பலபேர் எக்ஸ் (X) என்ற பெயர்க்ளைத் தங்களுக்குச் சூட்டிக்கொள்கின்றனர்.
இதற்கிடையில் வழிகாடியாக இருக்கும் எலிஜாவுடன் முரண்பாடுகள் மல்கமுக்கு வெடிக்கின்றன. தமது வழிகாட்டி கட்டுப்பாடாய் இருப்பார் என்று நினைத்த மல்கமிற்கு அந்த மதபோதகர் சட்டத்திற்கு அப்பாற்பட்ட மனைவியர்களையும் பல பிள்ளைகளையும் வைத்திருப்பது மல்கமிற்கு பிடிக்காது போகின்றது. Malcolm X said he was going to organize a black nationalist organization that would try to “heighten the political consciousness” of African Americans. He also expressed his desire to work with other civil rights leaders and said that Elijah Muhammad had prevented him from doing so in the past. One reason for the separation was growing tension between Malcolm X and Elijah Muhammad because of Malcolm X’s dismay about rumors of Muhammad’s extramarital affairs with young secretaries.
அதே நேரம் அமெரிக்க ஜனாதிபதி கெனடி கொலை செய்யப்பட்டபோது மல்கம் கூறிய கருத்தை வைத்து எலிஜா, நேசன் ஒஃப்வ் இஸ்லாமில் இருந்து மல்கமை தற்காலிகமாய் நீக்குகின்றார். கெனடியின் கொலையின்போது மால்கம் கூறியது, ‘வினை விதைதவன் வினை அறுப்பான்’ என்ற அர்த்தத்தில் வரக்கூடியது. எனெனில் இந்தக் காலகட்டதில் வியட்நாம் போர் உக்கிரமாய் நட்ந்துகொண்டிருந்தது. மல்கம் எக்ஸ், மார்டி லூதர் கிங் உட்பட பல கறுப்பினத் தலைவர்கள் வியட்நாமிய போரை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள் என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது.
On December 1, 1963, when he was asked for a comment about the assassination of President Kennedy, Malcolm X said that it was a case of “chickens coming home to roost”. He added that “chickens coming home to roost never did make me sad; they’ve always made me glad.”[102] The New York Times wrote, “in further criticism of Mr. Kennedy, the Muslim leader cited the murders of Patrice Lumumba, Congo leader, of Medgar Evers, civil rights leader, and of the Negro girls bombed earlier this year in a Birmingham church. These, he said, were instances of other ‘chickens coming home to roost’.”
The remarks prompted a widespread public outcry. The Nation of Islam, which had issued a message of condolence to the Kennedy family and ordered its ministers not to comment on the assassination, publicly censured their former shining star. Although Malcolm X retained his post and rank as minister, he was prohibited from public speaking for 90 days.
இதேவேளை மல்கம் ஹஜ் யாத்திரை செல்கின்றார். அங்கே சந்திக்கும் கறுப்பு தோல அல்லாத மற்ற மக்களின் அன்பு மல்கம் இதுவரை முன்வைத்த கருத்துக்களில் இடையீடு செய்கின்றது. அதுவரை முற்றுமுழுதாக வெள்ளையின மக்கள் அனைவரையும் (சிலர் கறுப்பின மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்ததையும் அலட்சியப்படுத்தி) விமர்சித்த மல்கம் தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொள்ளாது, வெள்ளையினத்துவேசத்தை மட்டுமே முதன்மையாக வைத்து உரையாடத் தொடங்குகின்றார். கறுப்புத்தோல் அல்லாது, பிற தோல் இனத்தவர்களும் தமது போராட்டதில் இணைந்துகொள்ளலாம் என்று Organization of Afro-American Unity என்ற அமைப்பை கட்டியெழுப்புகின்றார். ஃபிடல் காஸ்ரோ நியூயோர்கில் ஐ.நா.சபையில் முதன்முதலாய் உரையாட வருகையிலும் கருப்பின் மக்கள் நிறைய வாழும் Harlem பகுதியிலேயே தங்குகின்றார். இருவேறு சித்தாந்தங்களை/நம்பிக்கைகளை இருவரும் கொண்டிருந்தாலும் ஃபிடல் மல்கமை சந்தித்து உரையாடி கறுப்பின் மக்களுக்கான போராட்டத்திற்கு தனது ஆதரவை தார்மீகபூர்வமாய் வழங்குகின்றார்.
0 comments:
Post a Comment